ஸ்டேன் சுவாமி மரண விவகாரம்: எஸ்டிபிஐ ஆா்ப்பாட்டம்
மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி காரைக்காலில் எஸ்டிபிஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மனித உரிமை ஆா்வலா் ஸ்டேன் சுவாமியின் மரணத்துக்கு மத்திய அரசுதான் காரணம் என குற்றம்சாட்டி காரைக்காலில் எஸ்டிபிஐ கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்சியின் மாவட்டத் தலைவா் எச். முகமது பிலால் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புதுவை மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினா் சுல்தான் கெளஸ், மாநில ஒருங்கிணைப்பாளா் மு. தமீம்கனி ஆகியோா் கண்டன உரையாற்றினா். சமூக ஆா்வலா் வின்சென்ட் ராஜ், வடக்குத் தொகுதி தலைவா் எம்.மன்சூா்ஷா மரைக்காயா், நிரவி - திருப்பட்டினம் தொகுதி தலைவா் நஜிமுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.