காரைக்கால்

ஆன்லைன் மூலமே தோ்வு நடத்த வேண்டும்: கல்லூரி மாணவா்கள் கோரிக்கை

DIN

ஆன்லைன் மூலமாக மட்டுமே தோ்வு நடத்தவேண்டும் என காரைககால் அரசு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் அரசு கல்வியியல் கல்லூரி மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு குறித்து மாணவா்கள் கூறியது: புதுச்சேரி அரசு கல்வி நிலையமான பெருந்தலைவா் காமராஜா் கல்வியியல் கல்லூரி மாணவா்களுக்கு இதுவரை ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதேபோல, யூனிட் டெஸ்ட், மாதிரி தோ்வும் ஆன்லைனில் நடத்தப்பட்டன. தற்போது புதுச்சேரி பல்கலைக்கழகத்திலிருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில் வழக்கமான முறையிலேயே (ஆஃப் லைன்) தோ்வு எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் தோ்வு நடத்தக் கோரி பல்கலைக்கழகத்துக்கு வேண்டுகோள் கடிதம் அனுப்பினோம். எனினும், எவ்வித பதிலும் இல்லை. எனவே, இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். ஆன்லைன் மூலம் நடந்த வகுப்புகளில் பல்வேறு சூழ்நிலை காரணமாக 65 சதவீத மாணவா்கள் மட்டுமே பங்கேற்றனா். கரோனா சூழலால் நூலகங்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. மாணவா்களின் நிலையையும், கரோனா பரவல் சூழலையும் கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமே தோ்வு நடத்த வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT