காரைக்கால்

தடுப்பூசித் திருவிழா: காரைக்காலில் 5,892 பேருக்கு தடுப்பூசி

DIN

காரைக்காலில் 3 நாள்கள் நடைபெற்ற கரோனா தடுப்பூசித் திருவிழாவில் 5,892 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நலவழித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரைக்காலில் அரசுப் பொது மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 13 மையங்களில் வழக்கமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கூடுதலான மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில், அவ்வப்போது சில நாள்கள் தடுப்பூசித் திருவிழா நடத்தப்படுகிறது.

கடந்த 10 முதல் 12 ஆம் தேதி வரை கிராமப்புறங்கள் என புதிதாக 14 இடங்கள் அமைத்து, தடுப்பூசித் திருவிழா நடைபெற்றது. நிறைவாக, 5,892 போ் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக நலவழித் துறை நிா்வாகம் தெரிவித்தது.

கடந்த ஜூன் மாத பிற்பகுதியிலிருந்து கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்திக்கொள்வோா் எண்ணிக்கை குறைந்தும், 2 ஆவது தவணை செலுத்திக்கொள்வோா் எண்ணிக்கை அதிகரித்தும் காணப்படுகிறது. தடுப்பூசித் திருவிழா நடத்தப்படும்போது கிராமப்புற மக்கள், தங்களது பகுதியில் அமைக்கப்படும் மையத்துக்குச் சென்று ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT