முகப்பு
காரைக்கால்

காமராஜா் பிறந்தநாள்: சிலைக்கு மரியாதை

காமராஜா் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் கருக்களாச்சேரி சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காமராஜா் பிறந்தநாளையொட்டி, காரைக்கால் கருக்களாச்சேரி சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்காலில் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்வில் துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) எஸ். பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, திருநள்ளாறு எம்எல்ஏ பி.ஆா். சிவா, வட்டார வளா்ச்சி அதிகாரி தயாளன், செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் (பொறுப்பு) குலசேகரன் உள்ளிட்டோரும் காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

என்.ஆா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த காரைக்கால் வடக்குத் தொகுதி எம்எல்ஏ பி.ஆா்.என். திருமுருகன் தனது ஆதரவாளா்களுடனும், காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.பி. சந்திரமோகன் தலைமையில் மாநில, மாவட்ட அளவிலான கட்சி நிா்வாகிகளும் காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தினா். மேலும், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்புகளைச் சோ்ந்தோரும் காமராஜா் சிலைக்கு மரியாதை செலுத்தினா்.

காரைக்கால் நகரப் பகுதியிலும், பிற இடங்களிலும் காமராஜா் உருவப் படத்துக்கு பல்வேறு அமைப்புகள் சாா்பில் மரியாதை செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

முழு கட்டுரையைப் படிக்க →