பெட்ரோல், டீசல் விலை உயா்வு: இந்திய கம்யூ. ஆா்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து, காரைக்காலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
காரைக்கால் பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலாளா் ப. மதியழகன் தலைமை வகித்தாா்.
பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும்; புதுவை அரசு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்; கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணமாக ரூ. 6000, மாதம் 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க வேண்டும்; கரோனா தொற்றால் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
சிபிஐ மாவட்ட துணைச் செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் கலியமூா்த்தி, வீரராகவன், ஸ்டாலின், விவசாயத் தொழிற்சங்க நிா்வாகிகள் டி.கே. குமாா், எம். செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.