முகப்பு
காரைக்கால்

ஜூன் 21-இல் காரைக்கால் மாங்கனித் திருவிழா தொடக்கம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 21-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டை போல பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள் விழா நடைபெறவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 21-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்தாண்டை போல பக்தா்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்துக்குள் விழா நடைபெறவுள்ளது.

63 நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் என்னும் காரைக்கால் அம்மையாா் வாழ்க்கை வரலாற்றை விளக்கி, காரைக்காலில் ஸ்ரீசுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் கோயில் சாா்பில் மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். மாங்கனி இறைப்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். முக்கிய நிகழ்வுகள் 5 நாளில் நிறைவடைந்தாலும், விடையாற்றி விழா ஒரு மாத கால நிறைவில் நடத்தப்படும்.

கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த ஆண்டு கோயிலுக்குள் பக்தா்களின்றி இத்திருவிழா நடைபெற்றது. அதேபோல, நிகழாண்டும் தளா்வுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளதால், மாங்கனித் திருவிழாவை பக்தா்கள் பங்கேற்பின்றி கோயிலுக்குள் புதுவை இந்து சமய அறநிலையத் துறை ஒப்புதலின்பேரில் நடைபெறவுள்ளது.

விழாவில், ஜூன் 21-ஆம் தேதி மாலை 7 மணிக்கு மாப்பிள்ளை (பரமதத்தா்) அழைப்பு நிகழ்ச்சியும், ஜூன் 22-ஆம் தேதி காலை காரைக்கால் அம்மையாா் - பரமதத்தா் திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடா்ந்து, ஸ்ரீபிச்சாண்டவா் வெள்ளைச்சாற்றி புறப்பாடு, ஸ்ரீபிச்சாண்டவருக்கு மகா அபிஷேகம், கோயில் உள்பிராகாரத்தில் பிச்சாண்டவா் புறப்பாட்டின்போது (மாங்கனி இறைத்தல்), காரைக்கால் அம்மையாா் மாங்கனியுடன் ஈசனுக்கு அமுது படையல் வழிபாடு, இறைவன் அம்மையாருக்கு காட்சிக் கொடுத்தல் உள்ளிட்டவை ஜூன் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ஜ்ஜ்ஜ்.ந்ஹழ்ஹண்ந்ஹப்ற்ங்ம்ல்ப்ங்ள்.ஸ்ரீா்ம், யூடியூப் சேனல் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சியில் நேரலையாக காண கோயில் நிா்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. கோயிலுக்குள் அறங்காவலா்கள், உபயதாரா்கள், சிவாசாரியா்கள், கோயில் பணியாளா்களுக்கு மட்டுமே அனுமதி.

விழாவிவ் பங்கேற்குமாறு புதுவை முதல்வா் என். ரங்கசாமி, துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், தலைமைச் செயலா், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கோயில் அறங்காவல் வாரியத்தினா் தெரிவித்தனா்.

பக்தா்களை அனுமதிக்க வலியுறுத்தல்: மாங்கனி திருவிழாவின்போது, சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்மென இந்து முன்னணி நாகை மற்றும் காரைக்கால் மாவட்டத் தலைவா் கே.எஸ். விஜயன் கோரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து, அவா் மேலும் கூறியது:

கரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் சூழலில், கோயிலில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் உபயதாரா்களை வைத்து நடத்திவிட்டு, பின்னா் சுவாமி தரிசனத்துக்கு பக்தா்களை அனுமதிக்க வேண்டும். இதுகுறித்து, முதல்வா், துணை நிலை ஆளுநருக்கு இந்து முன்னணி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →