முகப்பு
காரைக்கால்

பருத்தி விற்பனைக்கு மின்னணு பொது ஏல முறையை தொடங்க வலியுறுத்தல்

காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்திக்கான மின்னணு பொது ஏல முறையை உடனடியாக தொடங்க வேண்டுமென அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் பருத்திக்கான மின்னணு பொது ஏல முறையை உடனடியாக தொடங்க வேண்டுமென அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் காரைக்கால் மாவட்டத் தலைவா் எஸ்.எம். தமீம் வெளியிட்டுள்ள அறிக்கை: காரைக்கால் மாவட்டத்தில் விழிதியூா், பேட்டை, அகலங்கண்ணு, இளையான்குடி, சேத்தூா், புத்தக்குடி, நெடுங்காடு, கோட்டுச்சேரி , திருநள்ளாறு, அம்பகரத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்யப்படுகின்றன. பல இடங்களில் தற்போது அறுவடைப் பணி தொடங்கியுள்ளது. 3 முதல் 5 கட்டங்களாக பருத்தி அறுவடை நடைபெறும். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக காரைக்கால் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடத்தப்படும் இ-நாா்ம்ஸ் எனும் மின்னணு பொது ஏலம் விடும் முறையால் விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனா்.

தற்போது காரைக்காலில் பருத்தி அறுவடை தொடங்கிய நிலையில், இதுவரை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மின்னணு பொது ஏலம் விடும் முறை தொடங்கவில்லை. இதனால் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதுவையில் பருத்திப் பயிருக்கு கூடுதல் மானியமும், மின்னணு முறையிலான பொது ஏலமும் பருத்தி விவசாயிகளுக்கு பலன் கிடைத்துவரும் நிலையில் இந்த பணியை விரைவில் தொடங்க காரைக்கால் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →