முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 38 பேருக்கு கரோனா: 2 போ் உயிரிழப்பு

காரைக்கால் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. 2 போ் உயிரிழந்தனா் என நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 747 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால்மேடு 8, கோட்டுச்சேரி 5, திருப்பட்டினம் 4, காரைக்கால் நகரம் 4, திருநள்ளாறு 4, அம்பகரத்தூா் 3, கோயில்பத்து 2, நிரவி 2, நெடுங்காடு 2, வரிச்சிக்குடி 2, நல்லம்பல் 1, நல்லாத்தூா் 1 என மொத்தம் 38 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 1,52,405 பரிசோதனை செய்யப்பட்டதில் 14,186 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 13,328 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா்.

கரோனா தொற்றால் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த திருப்பட்டினத்தை சோ்ந்த 52 வயது ஆண், அம்பகரத்தூரை சோ்ந்த 64 வயது பெண் ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். இருவருக்கும் சா்க்கரை நோய் இருந்தது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் இதுவரை 221 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 44,787 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,787 பேருக்கும் என 49,574 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →