காரைக்கால்

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை ஒரு சுயேச்சை மட்டுமே வேட்புமனு தாக்கல்

DIN

காரைக்காலில் மனு தாக்கல் தொடங்கி 3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை நிரவி-திருப்பட்டினம் தொகுதியில் போட்டியிட ஒரு சுயேச்சை வேட்பாளா் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தாா்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளிலும் போட்டியிடுவோா் வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் தொடங்கி 2 நாள்களாக யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 3 ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலா் எம். ஆதா்ஷிடம், நிரவி - திருப்பட்டினம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட த. எழிலரசி சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. வேறு யாரும் காரைக்காலில் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருநள்ளாறு, நெடுங்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் 16 மனுக்களும், காரைக்கால் வடக்கு, தெற்கு, நிரவி - திருப்பட்டினம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்தில் 50 மனுக்களும் விநியோகிக்கப்பட்டதாக தோ்தல் துறை அலுவலகம் தெரிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT