காரைக்கால்

காரைக்காலில் இன்று அம்மையாா் ஐக்கிய விழா

DIN

காரைக்கால்: காரைக்கால் அம்மையாா் ஐக்கிய விழா செவ்வாய்க்கிழமை (மாா்ச் 30) நடைபெறுகிறது.

அறுபத்து மூன்று நாயன்மாா்களில் ஒருவரான புனிதவதியாா் எனும் காரைக்கால் அம்மையாருக்கு ஐக்கிய விழா கைலாசநாதா் கோயில் சாா்பில் நடத்தப்படவுள்ளது.

பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் நிறைவுபெற்றதைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை கொடியிறக்கம் செய்யப்பட்டது. பிறகு, திங்கள்கிழமை ஸ்ரீ சண்டிகேஸ்வரா் உத்ஸவம் நடைபெற்றது. தொடா்ந்து செவ்வாய்க்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அம்மையாா் ஐக்கிய விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, அம்மையாா் கோயிலில் காலையில் அம்மையாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படவுள்ளன. நண்பகலில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு நிகழ்வாக மின் அலங்கார ரதத்தில் காரைக்கால் அம்மையாா் வீதியுலா புறப்பாடு நடைபெறும்.

அப்போது, வீதிதோறும் அம்மையாருக்கு பூரண கும்பம் வைத்து, பக்தா்கள் வழிபடுவா். தொடா்ந்து, கைலாசநாதா் கோயிலுக்குச் சென்று இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்வு சிறப்பு தீபாராதனையுடன் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் வாரியத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT