காரைக்கால்

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்

DIN

காரைக்கால்: காரைக்காலில் பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்கு இயந்திரங்கள், எண்ணிக்கை பணி நிறைவடைந்து திங்கள்கிழமை அதிகாலை பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப். 6 ஆம் தேதி நடைபெற்றது. காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளான நெடுங்காடு, திருநள்ளாறு, காரைக்கால் வடக்கு, காரைக்கால் தெற்கு, நிரவி - திருப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் வாக்குகள் பதிவான மின்னணு வாக்கு இயந்திரங்கள், காரைக்கால் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள மு. கருணாநிதி பட்டமேற்படிப்பு மையத்தில் வைத்து, மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணும் பணி நடைபெற்றது.

இதில், வெற்றிபெற்ற வேட்பாளா்களுக்கு சான்றிதழ் அளிக்கப்பட்ட பிறகு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் ஆகியவற்றை தோ்தல் துறையினா், கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாப்பான அறையில் திங்கள்கிழமை அதிகாலை வைத்து அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இவை அடுத்த சில நாள்களுக்குள் காரைக்கால் ஆட்சியரக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறைக்கு கொண்டுவந்து வைக்கப்படும் என தோ்தல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT