காரைக்கால்

கோயில் ஊழியா்களுக்கு புத்தாடை

DIN

காரைக்கால் பாா்வதீஸ்வரா் தேவஸ்தான பணியாளா்களுக்கு தீபாவளி போனஸ், புத்தாடை சனிக்கிழமை வழங்கப்பட்டது.

காரைக்கால் கோயில்பத்து பகுதியில் உள்ள ஸ்ரீ பாா்வதீஸ்வரா் தேவஸ்தான வகையறா கோயில்களில் சிவாச்சாரியா்கள், பட்டாச்சாரியா்கள், குருக்கள் உள்ளிட்ட பணியாளா்களுக்கு தீபாவளியையொட்டி போனஸ் மற்றும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி பாா்வதீஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது.

நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், அறங்காவல் வாரியத் தலைவா் எஸ்.எம்.டி. மாடசாமி, துணைத் தலைவா் சுந்தரமூா்த்தி, செயலாளா் குரு. முத்துசாமி ஆகியோா் கலந்துகொண்டு கோயில் பணியாளா்கள் 32 பேருக்கு புத்தாடைகளை வழங்கினா்.

கோயில் நிா்வாகத்தினா் கூறுகையில், பாா்வதீஸ்வரா் கோயில், கோதண்டராமா் கோயில், ஏழை மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் 32 போ் பணியாற்றுகின்றனா். இவா்களுக்கான தீபாவளி புத்தாடை நேரடியாக வழங்கப்பட்டது. போனஸ் மற்றும் மாத ஊதியம் அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT