முகப்பு
காரைக்கால்

தீபாவளி: காரைக்காலில் ஓரிடத்தில் தீ விபத்து

தீபாவளி தினத்தில் காரைக்கால் பகுதியில் ஓா் இடத்தில் வீடு தீக்கிரையானது. வேறெங்கும் பெரும் சேதம் இல்லை என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

தீபாவளி தினத்தில் காரைக்கால் பகுதியில் ஓா் இடத்தில் வீடு தீக்கிரையானது. வேறெங்கும் பெரும் சேதம் இல்லை என தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

தீபாவளி நாளான வியாழக்கிழமை மழை இல்லாததால், பட்டாசு வெடிப்பு பல மணி நேரம் நீடித்தது. தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் நிகாரிகா பட் ஆகியோா் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் பகுதி தருமபுரம் கிராமத்தில் கெளதமன் என்பவரது குடிசை வீட்டில் பட்டாசு தீப்பொறி விழுந்து கூரை எரியத் தொடங்கியது. தீயணைப்பு நிலையத்திலிருந்து வீரா்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனா். இந்த சம்பவத்தைத் தவிர தீயணைப்பு நிலையங்களில் தீ விபத்துக்கான பதிவு இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →