காரைக்கால்

காரைக்காலில் 19 பேருக்கு கரோனா

DIN

காரைக்கால் மாவட்டத்தில் 19 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 550 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி கோட்டுச்சேரி 5, காரைக்கால் நகரம் 3, நெடுங்காடு 3, நிரவி, கோயில்பத்து, திருநள்ளாறு, திருப்பட்டினம் தலா 2 என 19 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,11,982 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,295 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 15,879 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 257 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,07,626 பேருக்கும், 2-ஆவது தவணையாக 49,130 பேருக்கும் என 1,56,756 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT