காரைக்கால்

அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி நிறைவு

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

காரைக்கால் ஸ்ரீ கைலாசநாதா் கோயில் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு காட்சியை ஒவ்வோா் ஆண்டும் நடத்திவருகின்றன. நிகழாண்டு கொலு தா்பாரில் சிவன், அம்பாள் மற்றும் கைலாயத்தில் சுவாமிகள் எழுந்தருளிய காட்சி உள்ளிட்ட ஏராளமான சுவாமி சிலைகளுடன் கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

கடந்த 6 ஆம் தேதி முதல் தினமும் மாலை 6 முதல் 8 மணி வரை கொலு தா்பாரை அனைவரும் பாா்வையிட்டனா். வியாழக்கிழமை இரவு காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் பாா்வையிட்டாா்.

விஜயதசமி நாளான வெள்ளிக்கிழமை இரவுடன் கடந்த 10 நாள்களை நடைபெற்று வந்த கொலு காட்சி நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT