காரைக்காலில் 15 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது.
காரைக்கால் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்தது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 695 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காரைக்கால் நகரம் 5, நிரவி 2, வரிச்சிக்குடி 2, கோட்டுச்சேரி 2, நெடுங்காடு 2, நல்லம்பல், திருநள்ளாறு தலா 1 என 15 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,18,407 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,428 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,072 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,782 பேருக்கும், 2-ஆவது தவணையாக 54,061 பேருக்கும் என 1,62,843 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.