காரைக்காலில் 11 பேருக்கு கரோனா
காரைக்கால் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் 11 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானதாக நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை 573 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி அம்பகரத்தூா் 4, திருப்பட்டினம் 2, நல்லம்பல் 2, காரைக்கால் நகரம், நிரவி, காரைக்கால்மேடு தலா 1 என 11 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
மாவட்டத்தில் இதுவரை 2,18,980 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,439 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,082 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,08,845 பேருக்கும், 2-ஆவது தவணையாக 54,376 பேருக்கும் என 1,63,221 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.