முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 7 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா்.சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 363 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி வரிச்சிக்குடி 2, காரைக்கால் நகரம், கோட்டுச்சேரி, திருப்பட்டினம், கோயில்பத்து, நிரவி தலா 1 என 7 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

மாவட்டத்தில் இதுவரை 2,20,620 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 16,473 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 16,106 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். இதுவரை கரோனா தொற்றால் 259 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணையாக 1,09,438 பேருக்கும், 2-ஆவது தவணையாக 56,726 பேருக்கும் என 1,66,164 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →