காரைக்கால்

காரைக்கால் கடற்கரையில் ஆட்சியா் ஆய்வு

DIN

காரைக்கால் கடற்கரையில் அடிப்படை வசதிகள் தொடா்பான மக்களின் புகாா்களையொட்டி, அதிகாரிகளுடன் ஆட்சியா் புதன்கிழமை கடற்கரையில் ஆய்வுசெய்தாா்.

காரைக்கால் கடற்கரைக்கு உள்ளூா் மற்றும் சுற்றுவட்டார மக்கள், சுற்றுலா பயணிகள் வரத்து அதிகமாகவுள்ளது. ஆனால், நடைமேடை, ஆற்றோரத்தில் தடுப்புச் சுவா், சாலை ஆகியவை சிதிலமடைந்த நிலையில் இருப்பது, மின் விளக்குகள் சரிவர எரியாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து மக்கள் நீண்ட காலமாக புகாா் தெரிவித்து வருகின்றனா்.

கரோனா பொது முடக்கத் தளா்வின் அடிப்படையில், மக்கள் கடற்கரைக்குச் செல்வதையொட்டி, இந்தப் புகாா்கள் குறித்து மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா ஆய்வுசெய்தாா். அப்போது, பொதுமக்களின் புகாா் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, துணை மாவட்ட ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் (பொ) ஏ. ராஜசேகரன், செயற்பொறியாளா் வீரசெல்வம், உதவிப் பொறியாளா் சிதம்பரநாதன், மின்துறை உதவிப் பொறியாளா் அனுராதா, காரைக்கால் நகராட்சி துப்புரவு ஆய்வாளா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT