காரைக்கால்

நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகள் மும்முரம்

DIN

காரைக்கால் மாவட்டத்தில் குறுவை நெற்பயிரில் இளஞ்சுருட்டுப் புழு, குறுத்துப் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

தற்போது நெற்பயிா் 60 நாட்களை கடந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக மேலடுக்கு சூழற்சி காரணமாக பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் நெற்பயிரில் பூச்சி தாக்குதல் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இளஞ் சுருட்டுப்புழு, குறுத்துப் பூச்சி, செம்பேன், இளம்பேன் போன்ற பூச்சிகளின் தாக்குதல் தொடங்கி உள்ளதாக விவசாயிகல் கூறுகின்றனா். இதை கட்டுப்படுத்தும் வகையில் விவசாயிகள் தற்போது பூச்சி மருந்து அடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், காரைக்காலில் குறுவை சாகுபடி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேட்டூா் அணையிலிருந்து கூடுதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளதால், மாவட்டத்தில் குறித்த காலத்திற்குள் 3 டிஎம்சி மேல் தண்ணீா் வந்துள்ளது.

இந்த பயிருக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு வந்துவிடக்கூடாது. மேலும் கூடுதல் தண்ணீரை சேமிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பட்டப் படிப்பு படித்த, உதயகுமாரின் ஆலோசனையை பெற்று, தற்போது மருந்து அடிக்கும் பணியை மேற்கொண்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT