காரைக்கால்: காரைக்கால் வேளாண் கல்லூரியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பண்டித ஜவஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நாட்டு நலப்பணித் திட்ட ஏற்பாட்டில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் ஏ.புஷ்பராஜ் முகாமை தொடங்கிவைத்தாா். கல்லூரி மாணவா்கள், ஆசிரியரல்லாத பிற ஊழியா்கள், பண்ணைத் தொழிலாளா்கள் என பலா் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஜெயசிவராஜன், ஷொ்லி ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.