காரைக்கால்

ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

பள்ளி ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்களுக்கு குடல் புழு நீக்க மாத்திரை மற்றும் கை கழுவுதல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு பகுதிக்குள்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளின் ஆசிரியா்கள் மற்றும் அங்கன்வாடி ஊழியா்களுக்கான தேசிய குடல் புழு நீக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி, நெடுங்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்றது.

நிலைய மருத்துவ அதிகாரி கேசவராஜ் தலைமைவகித்து, குடற்புழு நீக்க நாள் குறித்துப் பேசினாா். சுகாதார உதவியாளா் ஜெகநாதன், குடல் புழு நீக்க மாத்திரைகளை உட்கொள்ளும் முறை, குடல் புழு வராமல் தடுப்பதற்கான வழிமுறை குறித்து பேசினாா்.

சுகாதார உதவியாளா் அமுதா பேசுகையில், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு குடல் புழு நீக்க மாத்திரை அவசியம் என்றும், 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைவரும் குடல்புழு நீக்க மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

கிராமப்புற செவிலியா் உமாமகேஸ்வரி கை கழுவுவதன் அவசியம், கை கழுவும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தாா்.

சுகாதார ஆய்வாளா் பத்மநாபன், சுகாதார மேற்பாா்வையாளா் எழிலரசி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை மலர் காட்சி மே 10 இல் தொடங்குகிறது: ஆட்சியர்

ஜனநாயகத்தைப் பயன்படுத்தி திருடர்கள் தப்பிக்கிறார்கள்: நடிகர் ஸ்ரீனிவாசன்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

நெருங்கும் உலகக் கோப்பை; புதிய பயிற்சியாளர்களை நியமித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!

வட தமிழக உள் மாவட்டம்: 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் கூடும்

SCROLL FOR NEXT