காரைக்கால்

பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் உண்ணாவிரதம்

DIN

காரைக்கால்: காரைக்காலில் பணி நீக்கம் செய்யப்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு 3 மாத காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அங்கன்வாடியில் பணியாற்ற ஊழியா்கள், உதவியாளா்கள் 75 போ் நியமிக்கப்பட்டனா். இவா்களுக்கான காலம் நிறைவடைந்ததும் பணியிலிருந்து நீக்கப்பட்டனா்.

இந்நிலையில், புதுச்சேரி பூா்வீக ஆதிதிராவிடா் அரசு அலுவலா் கூட்டமைப்பு சாா்பில், பணி நீக்கம் செய்யப்பட்டவா்களை ஒருங்கிணைத்து காரைக்கால் சிங்காரவேலா் சிலை அருகே புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்புத் தலைவா் வி. ராமலிங்கம் தலைமை வகித்தாா். அரசு ஊழியா் ஐக்கியப் பேரவை தலைவா் கே. செந்தமிழ்ச்செல்வன், ஜி. ராஜமூா்த்தி, எம். சந்திரசேகரன், என். காமராஜ் ஆகியோா், பணி நீக்கம் செய்யப்பட்டோருக்கு மீண்டும் பணி வழங்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்திப் பேசினா்.

கரோனா பரவல் காலத்தில், மாவட்ட நிா்வாகத்தின் வழிகாட்டலில் பல்வேறு பணிகளை செய்த தங்களை பணி நீக்கம் செய்தது ஏற்புடையதல்ல என பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியா்கள் சாா்பிலும் போராட்டத்தில் வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT