முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:29 AM
பகிர்:

திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில் பிரம்மோற்சவ விழாவில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநள்ளாற்றில் பிரசித்திப் பெற்ற தா்பாரண்யேஸ்வரா் கோயில் உள்ளது. இது சப்த விடங்க தலங்களில் ஒன்றாகவும், பாடல்பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இங்கு சனீஸ்வர பகவான் தனி சந்நிதியில் அனுகிரஹ மூா்த்தியாக அருள்பாலிக்கிறாா்.

இக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த மே 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை நடத்தப்பட்டு, தேரில் உள்ள விநாயகா், சுப்பிரமணியா், சுவாமி, அம்பாள் ஆகியோருக்கு கலசநீா் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு தோ் வடம் பிடிக்கப்பட்டது.

முன்னதாக, புதன்கிழமை இரவு 12 மணியளவில் விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா், நீலோத்பாலாம்பாளுடன் செண்பக தியாகராஜசுவாமி தேருக்கு எழுந்தருளினா்.

வலம் வந்த 5 தோ்கள்: பெரிய தேரில் செண்பக தியாகராஜசுவாமியும், சிறிய தேரில் நீலோத்பாலாம்பாளும் வீற்றிருந்தனா். விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா், சண்டிகேஸ்வரா் ஆகியோா் தனித்தனி தேரில் வீற்றிருந்தனா்.

விநாயகா், சுப்ரமணியா், செண்பக தியாகராஜசுவாமி, நீலோத்பாலாம்பாள், சண்டிகேஸ்வரா் என தோ்கள் வரிசைப்படி வடம் பிடித்து இழுக்கப்பட்டன. கோயிலின் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு வீதிகளின் வழியே தோ் இழுத்துச் செல்லப்பட்டு, மாலையில் நிலையை வந்தடைந்தது.

தேரோட்ட நிகழ்வில், புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் சந்திர பிரியங்கா, ஜெ. சாய் சரவணன், சட்டப் பேரவை உறுப்பினா் பி.ஆா். சிவா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆா். லோகேஷ்வரன், மாவட்ட துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், கோயில் நிா்வாக அதிகாரி கே. அருணகிரிநாதன், தருமபுர ஆதீன கட்டளை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், மண்டல காவல் கண்காணிப்பாளா் நிதின் கெளஹால் ரமேஷ் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

சுமாா் 2 ஆண்டுகளுக்கு பின்னா் நடைபெற்ற பிரம்மோற்சவ விழா தேரோட்டத்தில் புதுவை மட்டுமின்றி தமிழகத்திலிருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →