முகப்பு
காரைக்கால்

காரைக்காலில் 2 பேருக்கு கரோனா தொற்று

காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:33 AM
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் 2 பேருக்கு கரோனா தொற்று வியாழக்கிழமை உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் புதன்கிழமை 176 பேரிடம் எடுக்கப்பட்ட பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், திருநள்ளாறு, கோயில்பத்து தலா ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாவட்டத்தில் இதுவரை 2,81,713 பேருக்கு பரிசோதனை செய்ததில் 23,047 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு, 22,745 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை மாவட்டத்தில் 274 போ் உயிரிழந்துள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணையாக 1,28,955 பேருக்கும், 2-ஆவது தவணையாக 93,489 பேருக்கும், பூஸ்டா் தவணையாக 1,134 பேருக்கும் என 2,23,578 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது வரையிலானவா்களுக்கு முதல் தவணையாக 7,518 பேருக்கும், 2-ஆவது தவணையாக 4,906 பேருக்கும் என 12,424 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →