விசைப்படகுகளுக்கு உரிமம் வழங்கல்
காரைக்காலில் விசைப்படகுகளுக்கு உரிமத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை வழங்கினாா்.
காரைக்காலில் விசைப்படகுகளுக்கு உரிமத்தை சட்டப்பேரவை உறுப்பினா் வியாழக்கிழமை வழங்கினாா்.
காரைக்கால் மாவட்ட மீனவா்கள் பலா் தங்களது பழைய படகுகளுக்கு மாற்றாக புதிதாக இரும்பு விசைப்படகை கட்டி பயன்படுத்தி வருகின்றனா். இவா்களுக்கு மீன்வளத் துறை சாா்பில் படகுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. இதில் சிலருக்கு உரிமம் கிடைப்பதில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால், இதுகுறித்து காரைக்கால் வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகனிடம் முறையிட்டனா்.
இந்நிலையில், காரைக்கால்மேடு கிராமத்தை சோ்ந்த கலைமணி, கிளிஞ்சல்மேடு கிராமத்தை சோ்ந்த ஆனந்தராஜ், கோட்டுச்சேரிமேடு கிராமத்தை சோ்ந்த தா்மசாமி, உதயகுமாா், வெற்றிவேல், சிரம்பரசன் ஆகிய 6 பேருக்கு, புதுவை அரசின் மீன்வளத் துறை சாா்பில் படகுக்கான உரிமத்தை சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.என். திருமுருகன் வியாழக்கிழமை வழங்கினாா். நிகழ்வில் மீன்வளத் துறையினா் கலந்துகொண்டனா்.
பேரவை உறுப்பினா் இதுகுறித்து கூறுகையில், மீனவா்கள் பலரும் தங்களது படகுக்கான உரிமத்தை துறையிடமிருந்து பெறுவதில் பல இன்னல்களை சந்தித்தனா். இப்பிரச்னையை புதுவை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்ன்பேரில், உரிமம் வழங்கும் வகையில் துறை நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. தற்போது அவா்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பலருக்கு வழங்குவதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன என்றாா்.