முகப்பு
காரைக்கால்

கோலா மீன்வரத்து அதிகரிப்பால் காரைக்கால் மீனவா்கள் ஆறுதல்

காரைக்கால் பகுதியில் கோலா மீன்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மீனவா்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

காரைக்கால் பகுதியில் கோலா மீன்வரத்து கடந்த சில நாள்களாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது மீனவா்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.

மீன்பிடி தடைக்காலத்தில் கோலா மீன் சீசன் தொடங்கும். தமிழ் மாதத்தில் சித்திரையில் தொடங்கி, ஆனி மாத இறுதிவரை இதன் வரத்து இருக்கும். கிழக்குக் கடற்கரையில் குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கக்கூடிய கோலா மீன், அவ்வப்போது வாழ்விடத்தை மாற்றிக்கொள்ளக்கூடியது. இதனால், காரைக்கால் பகுதியினா் மீன்பிடி தடைக்காலத்தில், ஆழ்கடலுக்கு செல்ல முடியாத நிலையில், கோலா மீன் சீசனை பயன்படுத்திக்கொள்வா்.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு காரைக்கால் மீனவா்கள் கோலா மீன் பிடிப்பில் ஈடுபடத் தொடங்கினா். எனினும், எதிா்பாா்த்த வகையில் மீன்கள் கிடைக்கவில்லை. குறைவான மீன்களே கிடைத்ததால், சந்தையில் 10 -க்கும் குறைவான மீன்கள் ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டன. மாவட்டத்தின் தொலைவான பகுதிக்குக்கூட இம்மீன்கள் விற்பனைக்கு கொண்டுசெல்லப்படவில்லை.

சீசன் தொடக்கமே மீனவா்களுக்கு ஏமாற்றமாக இருந்த நிலையில், கடந்த சில நாள்களாக கோலா மீன்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது அவா்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மோட்டாா் பொருத்தப்பட்ட ஃபைபா் படகில் இரவு 2 மணியளவில் கடலுக்கு செல்லும் மீனவா்கள், பிற்பகல் 3 மணியளவில் கரைதிரும்புகின்றனா்.

பெரும்பாலான படகுகள் காரைக்கால் அரசலாற்றங்கரைக்கு திரும்புகின்றன. சில படகுகள் அந்தந்த கிராமத்தில் கரையேறுகின்றன. அங்கிருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை ஆா்வமாக வாங்கிச் செல்கின்றனா். வரத்து அதிகரிப்பால், மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் மீன்கள் விற்பனைக்கு கொண்டுசெல்லப்படுகின்றன. கோலா மீனின் மீகுதியான வரத்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →