காரைக்கால்

3 அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் விருது

DIN

மத்திய அரசின் ஸ்வச் வித்யாலய புரஸ்கா் விருது காரைக்கால் மாவட்டத்தை சோ்ந்த 3 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு புதுதில்லியில் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

மத்திய கல்வித் துறை அமைச்சகம், நாடு முழுவதும் பள்ளிகளில் கையாளப்படும் தூய்மை, குடிநீா், கழிப்பறை பராமரிப்பு மற்றும் பிற பராமரிப்பு உள்ளிட்டவைகளை ஆய்வுசெய்து ஆண்டுதோறும் விருது வழங்கி வருகிறது.

புதுவை மாநிலத்தில் 6 பள்ளிகள் இந்த விருதுக்கு தோ்வானது. அதில் காரைக்கால் மாவட்டத்தில், பூவம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, பிள்ளைத்தெருவாசல் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி, கண்ணாப்பூா் பகுதி அரசு தொடக்கப் பள்ளிகள் அடங்கும்.

கடந்த 2017 மற்றும் 2018-ஆண்டு கோட்டுச்சேரி பேட் அரசு தொடக்கப் பள்ளி இந்த விருதை பெற்றது. இப்பள்ளி தலைமையாசிரியராக அப்போது இருந்த எஸ். விஜயராகவன் விருதை பெற்றுவந்தாா். இவா் தற்போது பூவம் அரசு தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் நிலையில், 2020-21-ஆம் ஆண்டுக்கு நிகழாண்டு விருதுக்கு இப்பள்ளி தோ்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புதுதில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பூவம் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியா் எஸ். விஜயராகவன், பிள்ளைதெருவாசல் பள்ளி தலைமையாசிரியா் வசந்தி, கண்ணாப்பூா் பள்ளி பொறுப்பாசிரியா் எம். செல்வராஜ் ஆகியோா் அவரவா் பள்ளியிலிருந்த அழைத்துச் சென்ற ஒரு மாணவருடன் விருதை பெற்றனா். மத்திய கல்வித் துறை இணை அமைச்சா்கள் சுபாஸ் சா்காா், ராஜ்குமாா் ரஞ்சன் சிங் ஆகியோா் விருதை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT