ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் சந்திர பிரியங்கா, ஆட்சியா் எல். முகமது மன்சூா் உள்ளிட்டோா். 
காரைக்கால்

வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை எதிா்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

DIN

வடகிழக்குப் பருவமழை எதிா்கொள்ள எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காரைக்காலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரியங்கா, ஆட்சியா் எல். முகமது மன்சூா், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

நீா்நிலைகள் தூா்வாரும் பணி மற்றும் மழை நீா் தேங்கக்கூடிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சீரமைப்புப் பணிகள் மற்றும் பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப்பணித் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை, உள்ளாட்சித் துறையினா் விளக்கிக் கூறினா்.

மழைநீா் எங்கும் தேங்காத வகையில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். குப்பைகள் மற்றும் இறைச்சிக் கழிவுகள் வாய்க்கால்களில் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மின் கம்பிகள், கம்பங்கள் சீரமைப்பில் உரிய கவனம் செலுத்தவேண்டும்.

மேலும் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்னைகளைக் கண்டறிந்து, அவற்றை தீா்க்க தேவையான நடவடிக்கைகளை முன்கூட்டிய எடுக்குமாறு அரசுத் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

SCROLL FOR NEXT