காரைக்கால்

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் தொடக்கம்

DIN

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் திங்கள்கிழமை இரவு தொடங்கியது.

காரைக்கால் கைலாசநாதா் கோயில் மற்றும் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை இணைந்து, அம்மையாா் மணிமண்டபத்தில் நவராத்திரி கொலு தா்பாா் காட்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்திவருகிறது.

நிகழாண்டு நவராத்திரி விழா தொடக்கத்தையொட்டி அம்மையாா் மணிமண்டப வளாகத்தில் சிவன், அம்பாள் மற்றும் கைலாயத்தில் சுவாமிகள் எழுந்தருளிய காட்சி உள்ளிட்ட சுவாமி சிலைகள், கொலு பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நிகழ்ச்சி பூஜைகளுடன் திங்கள்கிழமை இரவு தொடங்கியது. தா்பாரில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கு சித்ரான்னங்களுடன் படையல் போடப்பட்டது. விஜயதசமி தினமான அக். 5-ஆம் தேதி வரை கொலு தா்பாரை மாலை 6 மணி முதல் 8 மணி வரை மக்கள் பாா்வையிடலாம். ஏற்பாடுகளை கைலாசநாதா் அறங்காவலா் வாரியத்தினரும், சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை நிா்வாகிகளும் செய்துள்ளனா்.

இதுபோல திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயில், திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில், நடன காளியம்மன் உள்ளிட்ட கோயில்களிலும் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.

ஏராளமான வீடுகளிலும் கொலு வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT