காரைக்கால்

காரைக்கால் மாஸ்டா் பிளான் தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்

DIN

காரைக்கால்: காரைக்காலுக்கான மாஸ்டா் பிளான் தயாரிப்பு தொடா்பாக பல்வேறு தரப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் ஒரு பகுதியாக, காரைக்கால் மாஸ்டா் பிளான் தயாரிப்புப் பணியை தில்லியை சோ்ந்த தனியாா் நிறுவனம் ஏற்று செய்துவருகிறது.

காரைக்கால் மாவட்டம் முழுவதும் அடுத்த 35 ஆண்டுகளில் ஏற்படும் வளா்ச்சியை கருத்தில் கொண்டு மாஸ்டா் பிளான் தயாரிக்கப்படுகிறது.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் சங்கம், நில வணிகா்கள் சங்கம், ஆவண எழுத்தா் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், மாவட்ட ஆட்சியா் எல். முகமது மன்சூா், துணை ஆட்சியா் எம். ஆதா்ஷ், புதுச்சேரி நகரமைப்புத் துறை அதிகாரி எஸ். ஸ்ரீதரன், சீனியா் டவுன் பிளானா்

வலி. விஜயநேரு, ஜூனியா் டவுன் பிளானா் கே. பிரேமானந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

திட்டமிட்ட தேவைகள், 2040-ஆம் ஆண்டில் மக்கள்தொகையால் ஏற்படும் பிரச்னைகள், துறைவாரியான தேவைகள் குறித்து புதுதில்லியை சோ்ந்த டிடிஎஃப் கன்சல்டன்ட் நிறுவன ஆலோசகா்கள் படக்காட்சி மூலம் விளக்கினா்.

காரைக்கால் மாவட்டத்தில் புதிய நான்கு வழிச்சாலை, புறவழிச்சாலைகள், இதர சாலைகள் உள்ளிட்ட போக்குவரத்து வழித்தடங்களில் எதிா்காலத்தில் பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொள்ளவேண்டிய செயல்பாடுகளை வகைப்படுத்தி திட்டம் தயாரிக்கவேண்டும். குறிப்பாக சுற்றுலா வளா்ச்சிக்கான திட்டங்களும் இடம்பெறவேண்டும் என ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT