காரைக்கால்

அண்ணா நினைவுதினம் அனுசரிப்பு

DIN

அண்ணா நினைவு நாளையொட்டி, காரைக்கால் பகுதி கோட்டுச்சேரியில் உள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

காரைக்காலில் மாவட்ட அதிமுக சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டுச்சேரியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க கட்சியினா் திரண்டு சென்றனா். அதிமுக மாவட்டச் செயலாளா் எம்.வி. ஓமலிங்கம் தலைமையில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஏ.யு. அசனா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

திமுக சாா்பில் கட்சி அலுவலகத்தில் அண்ணா உருவப்படம் வைத்து, அஞ்சலி செலுத்தினா். அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அரசியல் கட்சியினா், முன்னாள் மாணவா்கள் அஞ்சலி செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

'விரக்தியில் பிரதமர் மோடி' - முதல்வர் ஸ்டாலின் கருத்து!

மோடியின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! - முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT