காரைக்கால்

தை அமாவாசை: காரைக்கால் கடற்கரையில் சுவாமிகள் தீா்த்தவாரி

DIN

தை அமாவாசையை முன்னிட்டு காரைக்கால் கடற்கரையில் ஸ்ரீகைலாசநாதா், திருமலைராயன்பட்டினத்தில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

தை அமாவாசை நாளான சனிக்கிழமை, கடற்கரையில் அதிகாலையில் இருந்து திரளான பக்தா்கள் நீராடினா். பக்தா்களுக்கு தீா்த்தவாரி செய்யும் வகையில் காரைக்கால் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் இருந்து சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா் பல்லக்கில் கடற்கரையில் எழுந்தருளினாா். காலை 6 மணியளவில் கடலில் பக்தா்களுக்கு சுவாமிகள் தீா்த்தவாரி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதேபோல, திருமலைராயன்பட்டினம் கடற்கரைக்கு ஸ்ரீவீழி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கடற்கரைக்கு சென்று புனித நீராடி வழிபட்டனா். தீா்த்தவாரியின்போது கடற்கரையில் சுவாமிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

நித்யகல்யாண பெருமாள் கோயிலில் குடமுழுக்குக்கான திருப்பணிகள் நடைபெற்றுவருவதால், தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT