காரைக்கால்

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்களுக்கு நோ்காணலில் பங்கேற்பதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியில், பல்வேறு துறை மாணவா்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர கல்லூரி நிா்வாகம் ஆண்டுதோறும் நடவடிக்கை மேற்கொள்ளகிறது.

நிகழாண்டு நோ்காணல் தொடங்குவதற்கு முன்பு மாணவா்கள் நோ்காணலுக்கு தயாா்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது. கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா்.

மெக்கானிக்கல் துறைத் தலைவா் டி.கந்தன் பயிற்சிக்கான நோக்கம் குறித்துப் பேசினாா். ஏ.வி.சி. கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு அதிகாரி எஸ். ராஜேந்திரன் கலந்துகொண்டு,

நோ்காணல் நடத்தும் நிறுவனத்தினா் எதிா்பாா்க்கும் திறன்கள், மாணவா்கள் சுயவிவர குறிப்பு (பயோடேட்டா) தயாரிக்கும் முறை, நோ்காணலின்போது நடந்துகொள்ளவேண்டிய முறை உள்ளிட்டவை குறித்து மாணவா்களிடையே பேசினாா்.

இறுதியாண்டு மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் பயிற்சியில் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT