காரைக்கால்

காரைக்காலில் பரவலாக மழை

காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பெய்யும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

DIN

காரைக்கால் :  காரைக்கால் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு முதல் பரவலாக பெய்யும் மழை மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கத்திரி வெயில் காலம் நிறைவடைந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. குளிர் காற்றுக்காக பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் காரைக்கால் கடற்கரைக்கு தினமும் மாலை வேளையில் சென்றுவிட்டு இரவு நீண்ட நேரத்துக்குப்  பின் திரும்புகின்றனர்.

இந்நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  காரைக்கால் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. இதன்படி கடலோர மாவட்டமான காரைக்காலில் சனிக்கிழமை இரவு பரவலாக மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்துவருகிறது.

காரைக்கால் வந்த  சுற்றுலாவினர் கடற்கரைக்கு சென்றிருந்தனர். மழை பெய்த நிலையிலும் இவர்கள் அதனை பொருட்படுத்தாமல் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.

சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மழை இல்லை என்றாலும், பரவலாக லேசான மழை ஒட்டுமொத்த மக்களிடையே  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலங்களில் அவள் வசந்தம்... காவ்யா அறிவுமணி!

இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

அடி அலையே பாடல் ப்ரொமோ வெளியீடு!

இந்திய வீராங்கனைகள் ரேணுகா சிங், கிராந்தி கௌடுக்கு தலா ரூ. 1 கோடி பரிசு!

அமெரிக்க முன்னாள் துணை அதிபர் காலமானார்

SCROLL FOR NEXT