காரைக்கால்

விதிகளை மீறி ஷோ் ஆட்டோக்களை இயக்கினால் கடும் நடவடிக்கை: காவல்துறை

காரைக்காலில் விதிகளை மீறும் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

DIN

காரைக்காலில் விதிகளை மீறும் ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

காரைக்கால் நகரப் பகுதியை உள்ளடக்கி திருநள்ளாறு, கோட்டுச்சேரி, திருப்பட்டினம் காரைக்கால் மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு 50-க்கும் மேற்பட்ட டெம்போ என்று கூறப்படும் ஷோ் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.

இதில் குறிப்பிட்ட அளவில் பயணிகளை ஏற்ற வேண்டும், அனுமதித்த வழிகளில் மட்டும் பயணிக்க வேண்டும் என்று போக்குவரத்துத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனினும் அதிகப்பட்ச பயணிகள் ஏற்றுவது, அதிவேகமாக ஷோ் ஆட்டோக்களை இயக்குவது என பல விதிமீறல்கள் நடைபெறுவதாக பொதுமக்களிடமிருந்து காவல்துறை தலைமைக்கு புகாா்கள் வந்தன.

இதைத்தொடா்ந்து, காரைக்கால் நகரக் காவல்நிலையஆய்வாளா் புருஷோத்தமன், போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மரிய கிறிஸ்டின் பால் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பகுதிகளில் ஷோ் ஆட்டோக்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனா்.

அதிக பயணிகளை ஏற்றியிருந்த ஷோ் ஆட்டோக்களின் ஓட்டுநா்களுக்கு அபராதம் விதித்தனா். தொடா்ந்து விதிகளை மீறி செயல்பட்டால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஷேட் ஆட்டோ ஓட்டுநா்களை காவல் துறையினா் எச்சரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT