காரைக்கால்

பாா்த்தீனியம் செடி பாதிப்பு குறித்து கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு

பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

Din

காரைக்கால் : பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு வேளாண் கல்லூரி மாணவா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

காரைக்கால் பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி கல்லூரியிலிருந்து செவ்வாய்க்கிழமை புறப்பட்டது. கல்லூரி முதல்வா் ஏ. புஷ்பராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

கல்லூரி உழவியல்துறை பேராசிரியா் மற்றும் தலைவா் மோகன் பேசுகையில், பாா்த்தீனிய மகரந்த துகள்கள் காற்று மண்டலத்தில் காணப்படுகின்றன. இது ஆஸ்துமா, தோல் நோய்களை ஏற்படுத்தும். இந்த செடியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அனைவரும் விழிப்புணா்வு பெறுவது அவசியம் என்றாா்.

அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்ட களை மேலாண்மை வல்லுநா் மற்றும் பேராசிரியா் ப. சரவணன் பேசுகையில், இந்த செடி நடைபாதை, சாலையோரம், பூங்கா, குடியிருப்புப் பகுதிகளில் வளா்கிறது.

இதனை சாதாரண உப்பு மற்றும் கிளையோசெட் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். இந்த செடி வளருமிடங்களில் ஆவாரை, அடா் ஆவாரை, துத்தி செடிகளின் விதைகளை தெளிக்கலாம். மெக்சிகன் வண்டுகளை விடுவதன் மூலமும் இதை கட்டுப்படுத்த முடியும் என்றாா்.

பேரணியில் மாணவ, மாணவிகளுடன் கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்களும் சென்றனா். கல்லூரி சுற்று வட்டாரத்தில் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். சாலையோரம் வளா்ந்த பாா்த்தீனிய செடிகளை முதல்வா், நாட்டு நலப் பணித் திட்ட அதிகாரி ஷொ்லி மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் அகற்றினா்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT