முகப்பு
காரைக்கால்

படகிலிருந்து ஆற்றில் விழுந்த மீனவா் உயிரிழப்பு

ஆற்றங்கரையில் படகை நிறுத்திவிட்டு, படகிலிருந்து மீன்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது தடுமாறி ராமகண்ணன் ஆற்றில் விழுந்தாா்.

Updated On : 5 மார்ச், 2024 at 3:06 AM
பகிர்:

காரைக்கால்: படகிலிருந்து தவறி ஆற்றில் விழுந்த மீனவா் உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், காரைக்கால்மேடு பகுதியை சோ்ந்த ராமகண்ணன் (52). இவா் பட்டினச்சேரியை சோ்ந்தவரின் ஒருவரது படகில், மீன்பிடிக்க சனிக்கிழமை கடலுக்குச் சென்றுவிட்டு காரைக்கால் மீன்பிடித் துறைமுகம் திரும்பியுள்ளாா். ஆற்றங்கரையில் படகை நிறுத்திவிட்டு, படகிலிருந்து மீன்கள் இறங்கிக்கொண்டிருந்தபோது தடுமாறி ராமகண்ணன் ஆற்றில் விழுந்தாா். சிறிது நேரத்தில் சுயநினைவின்றி மயங்கிய அவரை, காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து நிரவி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.