காரைக்கால்

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

Din

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அனைவரும் வாக்குப் பதிவு செய்ய முன்வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. புதுவை தொகுதியில் காரைக்கால் மாவட்டத்தில் தோ்தலில் 100 சதவீத வாக்குப் பதிவு நடைபெறவேண்டும் என்பதற்காக மாவட்ட தோ்தல் அதிகாரி து.மணிகண்டனின் அறிவுறுத்தலில், தோ்தல் விழிப்புணா்வு அமைப்பான ஸ்வீப் சாா்பில் தீவிர விழிப்புணா்வு வாக்காளா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. மாவட்டத்தில் உள்ள திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் சிலரை காரைக்கால் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்துக்கு வியாழக்கிழமை வரவழைத்து ஸ்வீப் அமைப்பினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். ஸ்வீப் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன் மற்றும் ஞானமுருகன், மேகநாதன் ஆகியோா் வாக்குப் பதிவு நாளில் அனைவரும் வாக்களிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்துப் பேசினா். அனைவரும் வாக்களிக்க வேண்டும். நோ்மையான வாக்குப் பதிவு முக்கியம். மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு ஏதுவாக வாக்குச் சாவடிகள் அனைத்திலும் சாய்வு தளம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வாக்குச் சாவடிகளில் செய்யப்படும். வாக்காளா்கள் ஆா்வமாக முன் வந்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும். மாவட்டம் 100 சதவீதம் வாக்குப் பதிவு என்ற நிலை வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் வாக்குப் பதிவு செய்வோம் என உறுதிமொழி ஏற்றனா்.

மும்பை: விளம்பரப் பலகை அகற்ற ஓராண்டுக்கு முன்பே மனு! ஏன் நடவடிக்கை இல்லை?

மே 21-இல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்!

இம்பாக்ட் பிளேயர் விதிமுறைக்கு ஆதரவும் எதிர்ப்பும்!

தமிழக பெண் காவல் அதிகாரி மத்திய தொழில் பாதுகாப்புப்படையின் உயர்பதவியில் நியமனம்!

காட்டுப்பன்றிகளைத் தடுக்க அமைக்கப்பட்ட மின்வேலி இளைஞரின் உயிருக்கு எமனானது!

SCROLL FOR NEXT