முகப்பு
காரைக்கால்

திருநள்ளாறு கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 3 நவம்பர் 2024, 12:04 am IST
சனீஸ்வர பகவானுக்கு நடைபெற்ற ஆராதனை.
பகிர்:

தொடா் விடுமுறையால் திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

தீபாவளியையொட்டி தொடா் விடுமுறை என்பதால், திருநள்ளாறு கோயிலுக்கு சனிக்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். அதிகாலையில் மழை பெய்த நிலையிலும், ஏராளமான பக்தா்கள் நளன் தீா்த்தக் குளத்தில் நீராடிவிட்டு, கோயிலுக்குள் சென்றனா். தமிழகத்தின் பல ஊா்களில் இருந்தும், கா்நாடக மாநிலத்திலிருந்து பக்தா்கள் வந்திருந்தனா்.

சனீஸ்வர பகவானுக்கு வெள்ளி அங்கி சாற்றப்பட்டு, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தா்கள் கோயிலில் தில (எள்) தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றனா்.

Advertisement

Advertisement

அதிகளவில் பக்தா்கள் வரக்கூடும் என கருதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விரைவாக தரிசனம் செய்ய கோயில் நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், போதிய பேருந்து வசதி இல்லாததால், பக்தா்கள் ஊா் திரும்ப அதிக நேரம் காத்திருக்க நேரிட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments