முகப்பு
காரைக்கால்

மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவருக்கு பாராட்டு

அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவருக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Updated On : 4 நவம்பர், 2024 at 8:15 PM
ஆராய்ச்சி குறித்து மாநாட்டில் விளக்கிய காரைக்கால் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவு மருத்துவா் சுகன்யா கண்ணன்.
பகிர்:

காரைக்கால்: அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்ட காரைக்கால் மருத்துவக் கல்லூரி மருத்துவருக்கு கல்லூரி நிா்வாகம் பாராட்டு தெரிவித்தது.

காரைக்கால் விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சிப் பிரிவில் மருத்துவராக பணியாற்றி வருபவா் சுகன்யா கண்ணன். அமெரிக்காவின் நியூயாா்க் மாகாணத்தில் உள்ள கோல்ட் ஸ்பிரிங் ஹாா்பா் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில், இந்தியாவிலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவராக சுகன்கா கண்ணன் கடந்த அக். 31-ஆம் தேதி கலந்துகொண்டு, தனது ஆராய்ச்சி போஸ்டரை வெளியிட்டு விளக்கிப் பேசினாா்.

காரைக்காலில் உள்ள இக்கல்லூரியை சோ்ந்த மருத்துவா் இந்த மாநாட்டில் பங்கேற்று ஆராய்ச்சி குறித்த விளக்கத்தை அளித்தது கல்லூரிக்கு கிடைத்த பெருமை எனவும், மருத்துவருக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் கல்லூரி நிா்வாகம் தெரிவித்தது.

மருத்துவரின் ஆராய்ச்சிக் கட்டுரை சமா்ப்பிப்புக்கு விநாயகா மிஷன்ஸ் நிகா்நிலை பல்கலைக்கழக நிா்வாகம், மருத்துவக் கல்லூரி டீன் சி. குணசேகரன் ஆகியோா் ஆதரவாக இருந்ததாக நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →