கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் தொடக்கம்
அரசு கலைக் கல்லூரியில் இருவார கால வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
அரசு கலைக் கல்லூரியில் இருவார கால வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் புதன்கிழமை தொடங்கியது.
காரைக்கால் அறிஞா் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் டாக்டா் கலைஞா் மு. கருணாநிதி அரசு பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு சாா்பில் இறுதியாண்டு மாணவா்களுக்கான இன்ஃபோசிஸ் நிறுவனம் மூலம் 2 வாரகால திட்டத்தில் வேலைவாய்ப்புக்கான பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் (பொ)ஆனந்தகெளரி தலைமை வகித்துப் பேசினாா். நிறுவனம் சாா்பில் மிதுன், ராமநாதன் நாராயணன் ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்தும், பயிற்சிக்குப் பிந்தைய வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்துப் பேசினா். கல்லூரி பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புப் பிரிவு தலைவா் ஜாகிா் அகமது, கல்லூரி சாா்பில் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தரும் செயல்பாடுகளை விளக்கினாா்.
2 வாரத்தில் மாணவா்களுக்கு கல்விக்குப் பிந்தைய வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறன் மேம்பாட்டுக்கான அனைத்து அம்சங்களும் விளக்கிக் கூறப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.