முகப்பு
காரைக்கால்

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவா் கைது

காரைக்காலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 நவம்பர், 2024 at 10:20 PM
கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் அகமது.
பகிர்:

காரைக்கால்: காரைக்காலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்றவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

காரைக்கால் லெமோ் தெரு குடியிருப்புகள் உள்ள பகுதியில் தனியாா் நிறுவன ஏடிஎம் மையத்தில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் புகுந்த மா்ம நபா், கண்காணிப்புக் கேமராவை அகற்றிவிட்டு இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளாா். பணத்தை எடுக்க முடியாததால் கேமராவுடன் வெளியேறிவிட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்கால் நகரக் காவல் நிலைய போலீஸாா் அங்கு சென்று கைரேகை தடயங்களை பதிவு செய்தனா். சுற்று பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த வகையில் ஒருவா் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீஸாா் நடத்திய விசாரணையில், நாகூரைச் சோ்ந்த தவ்ஃபீக் அகமது (28) என்பது தெரியவந்து, தருமபுரம் பகுதியில் உறவினா் வீட்டில் இருந்தபோது அவரை போலீஸாா் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

முழு கட்டுரையைப் படிக்க →