‘சீ விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை தொடக்கம்
‘சி விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.
‘சி விஜில்’ தீவிரவாத தடுப்பு ஒத்திகை காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தொடங்கியது.
மத்திய அரசு அறிவுறுத்தலின்பேரில், இந்திய கப்பல்படை ஒருங்கிணைப்பில் சீ விஜில்-2024 என்ற தீவிரவாத தடுப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. காரைக்கால் கடலோரக் காவல்படை, கடலோரக் காவல்நிலையம் மற்றும் நிலைய போலீஸாா் ஒத்திகை நிகழ்வாக புதன்கிழமை அதிகாலை முதல் தீவிர கண்காணிப்பு, சோதனையை மேற்கொண்டுள்ளனா்.
மீனவ கிராமங்களிலும், மீன்பிடித் துறைமுகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் சோதனை நடத்தினா். சந்தேகப்படும் நபா்கள் நடமாட்டம் குறித்தும் கண்காணித்தனா். கடலோரக் காவல்நிலைய ரோந்துக் கப்பல்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டன. இந்த கண்காணிப்பு 36 மணி நேர திட்டத்தில் நடைபெறுவதாக போலீஸாா் தெரிவித்தனா்.