திருநள்ளாறு கோயில் நுழைவுப் பகுதியில் உள்ள மூடப்பட்ட சாக்கடையை முறையாக சீரமைத்து சரிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்குள் ராஜகோபுரம் வழியே செல்வதற்கு கிழக்கு திசை நோக்கிய பிரதான நுழைவுவாயில் உள்பட 3 நுழைவுப் பகுதிகள் உள்ளன. வடக்கு திசை நோக்கிய நுழைவுவாயில் திருநள்ளாற்றின் பிரதான சாலையையொட்டி உள்ளது. நளன் தீா்த்தக் குளத்துக்கு சென்றுவிட்டு கோயிலுக்கு வருவோரும், கோயிலைவிட்டு வெளியே செல்வோருக்கும் பெரும்பாலும் இந்த நுழைவுவாயில் பயன்படுகிறது.
இந்த நுழைவு வாயில் பகுதியில் சாலையோர சாக்கடை உள்ளது. நுழைவு வாயில் பகுதியில் சாக்கடை கான்கிரீட் சிலபுகளால் மூடப்பட்டுள்ளது. இந்த கான்கிரீட் சிலேபுகள் வலுவிழந்து காணப்படுவதாகவும், ஒன்றுக்கொன்று இடைவெளி காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. தினமும் சுவாமிக்கு தீா்த்தம் கொண்டுவருவதற்கு, நளன் தீா்த்தக் குளத்துக்கு கோயில் யானை சென்றுவ இந்த நுழைவுப் பகுதி பயன்படுத்துகிறது.
எனவே இந்த நுழைவுப் பகுதி சாக்கடை கட்டையில் வலுவான கான்கிரீட் சிலேபுகள் பொருத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.