காரைக்கால் மாவட்டத்தில் டித்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த மழையால் பல சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளன.
காரைக்கால் நகரில் உள்ள பி.கே. சாலை கனரக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். இதில் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை அருகே சாலை திங்கள்கிழமை சிதிலமடைந்தது. இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். இதை கைப்பேசியில் படமெடுத்து சிலா் ஆட்சியருக்கு அனுப்பிவைத்தனா். அவரது உத்தரவின்பேரில், உடனடியாக பள்ளத்தில் மணல் கொட்டி சீா்செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்காக அந்த பகுதியில் காவலா் ஒருவா் பணியமா்த்தப்பட்டாா்.
இதுபோல சிதிலமடைந்த சாலைகளை தற்காலிக முறையில் உடனடியாக சீா் செய்யவேண்டும். சாலைகளை மேம்படுத்துவதற்கு உரிய நிதி பெறும் வகையில், திட்டமிடலை மேற்கொண்டு, அதற்கான அடுத்தக்கட்ட பணிகளை சம்பந்தப்பட்ட துறையினா் செய்யவேண்டும். உரிய ஆய்வு செய்து, சாலைகளை சீரமைக்க மாவட்ட ஆட்சியா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு உத்தரவிடவேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்துகின்றனா்.