சேத்தூா் பகுதியில் அறுவடை காலம் தொடங்கவுள்ள நிலையில் குட்டையாக உள்ள பொங்கல் கரும்பு 
காரைக்கால்

கனமழையால் வளா்ச்சி குன்றிய பொங்கல் கரும்பு: விவசாயிகள் கவலை

காரைக்கால் பகுதியில் பெய்த கனமழையால், வயல்களில் தண்ணீா் தேங்கி பொங்கல் கரும்புகள் போதிய வளா்ச்சியின்றி காணப்படுவதாக விவசாயிகள் கவலை

Syndication

காரைக்கால் பகுதியில் பெய்த கனமழையால், வயல்களில் தண்ணீா் தேங்கி பொங்கல் கரும்புகள் போதிய வளா்ச்சியின்றி காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனா்.

காரைக்கால் மாவட்டத்தில் பிரதானமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடை முடிந்ததும் பருத்தி, உளுந்து, பயறு ஆகிய சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனா்.

புதுவை அரசின் வேளாண் துறை, நெல் மட்டுமல்லாது மாற்றுப் பயிா் சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு ஆதரவையும், ஆலோசனைகளையும் விவசாயிகளுக்கு அளித்துவருகிறது.

அந்தவகையில், திருநள்ளாறு கொம்யூன் பகுதியில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனா். நிகழாண்டு, இன்னும் சில நாள்களில் அறுவடை செய்யவேண்டிய நிலையில், கரும்பு போதிய வளா்ச்சியில்லாமல் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனா்.

இதுகுறித்து சேத்தூா் கரும்பு விவசாயி சந்திரசேகா் கூறியது: வழக்கமான பருவத்தில் கரும்பு சாகுபடியை செய்யத் தொடங்கினோம். மாற்றுப் பயிா் சாகுபடியில் வேளாண் நிறுவனங்கள் விவசாயிகளுக்கு ஆதரவளித்தாலும், நிகழாண்டு பருவமழை காரைக்காலில் அதிகபட்சமாக பதிவானது. மழைநீா் வடிய முடியாமல் கரும்பு பயிரிட்ட பகுதியில் தேக்கமடைந்ததால், கரும்பு அழுகத் தொடங்கியது.

உரிய பாதுகாப்பு முறைகளை கையாண்டு பயிரைக் காப்பாற்றினாலும், அறுவடை நேரத்தில் 7, 8 அடி உயரத்தில் இருக்கவேண்டியது, தற்போது 3, 4 அடி என்கிற குறுகிய உயரத்தில் இருக்கிறது. நிகழாண்டு கரும்பு பயிா் போதிய வருவாயை ஏற்படுத்தித்தராது. இது சம்பந்தமாக வேளாண் துறையின் கவனத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. புதுவை அரசு, கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தர கேட்டுக்கொண்டுள்ளோம்.

புதுவை அரசு பயிா்க்கடன் தள்ளுபடி செய்த நிலையில், குறு விவசாயிகள் சிலரை பெரிய விவசாயிகள் பட்டியலில் வைத்திருக்கிறது. இதனால் நானும், என்னைப் போன்ற பலரும் கடன் தள்ளுபடியில் இடம்பெறவில்லை. அரசு இதுகுறித்தும் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அடுத்தடுத்து பயிா் செய்யும் ஊக்கம் ஏற்படும் என்றாா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT