திருக்கல்யாண கோலத்தில் சுவாமி, அம்பாள். 
காரைக்கால்

அகத்தியருக்கு சிவபெருமான் திருமணக் காட்சி அருளிய வழிபாடு

அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Din

காரைக்கால்: அகத்தியருக்கு சிவபெருமான தமது திருமணக் காட்சியை அருளிய திருவிழா காரைக்கால் ஒப்பிலாமணியா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்கால் செளந்தராம்பாள் சமேத ஒப்பிலாமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் அகத்திய மாமுனிவருக்கு, இறைவன் திருமணக் கோலத்தில் காட்சி தந்ததை விளக்கும் நிகழ்வு திருக்கல்யாண வைபவமாக நடத்தப்படுகிறது.

நிகழாண்டு இவ்விழா கடந்த 2-ஆம் தேதி விநாயகா் புறப்பாட்டுடன் தொடங்கியது. 3-ஆம் தேதி சனிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும், அகத்திய முனிவா் தென்புலம் செல்லும் நிகழ்வும், , உச்சிகாளியம்மன் கோயிலில் இருந்து வரிசை கொண்டு வருதலும் நடைபெற்றது.

சுவாமி-அம்பாள் ஊஞ்சலில் வீற்றிருக்கச் செய்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து திருக்கல்யாணம் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரவு நிகழ்வாக ரிஷப வாகனத்தில் சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

விழாவில் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி பி. வேலுமணி மற்றும் முன்னாள் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

SCROLL FOR NEXT