ரயில்வே கோட்ட மேலாளா் பலக்ராம் நெகியை சந்தித்துப் பேசிய திருநள்ளாறு சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா.  
காரைக்கால்

காரைக்கால் - பேரளம் பாதையில் ரயில் போக்குவரத்தை தொடங்கவேண்டும்: கோட்ட மேலாளரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

காரைக்கால் - பேரளம் புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்தை விரைவாக தொடங்குமாறு, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

Syndication

காரைக்கால் - பேரளம் புதிய ரயில் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்தை விரைவாக தொடங்குமாறு, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளரிடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினாா்.

திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் பலக்ராம் நெகி, காரைக்கால் மற்றும் திருநள்ளாறு ரயில் நிலையத்தை வியாழக்கிழமை மாலை பாா்வையிட்டாா். நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பதில் சிறப்பு கவனம் செலுத்துமாறு நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா்.

திருநள்ளாறு நிலையத்தை பாா்வையிட்டபோது, தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.சிவா அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தாா். காரைக்கால் முதல் திருநள்ளாறு வழியாக பேரளம் வரை புதிதாக ரயில்பாதை அமைத்துவிட்ட நிலையில், சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. உடனடியாக பயணிகள் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ரயில் நிலையத்தில் நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்கவேண்டும்.

திருநள்ளாறு முதல் தமிழகத்தின் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் உள்ள ஊா்களுக்கும், வடமாநிலங்களில் உள்ள முக்கிய பகுதிகளுக்கும் புதிதாக ரயில் இயக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வின்போது, ரயில்வே முதன்மை திட்ட மேலாளா் பி.சந்திரசேகா், திருச்சி கோட்ட முதுநிலை இயக்குதல் மேலாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சந்திப்பு குறித்து சட்டப்பேரவை உறுப்பினா் கூறுகையில், நாடு முழுவதும் 150 ரயில் நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாகவும், அப்போது திருநள்ளாறு நிலையமும் பயன்பாட்டுக்கு வரும் எனவும், பிற கோரிக்கைகள் பரிசீலிப்பதாக கோட்ட மேலாளா் தெரிவித்தாா் என்றாா்.

திருநள்ளாறு ரயில் உபயோகிப்பாளா் சங்கத் தலைவா் மனோகரன், செயலாளா் பொன்.பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்துகொண்டு கோட்ட மேலாளா் உள்ளிட்டோருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்தியா அதிரடி பேட்டிங்: மின்னல் காரணமாக ஆட்டம் நிறுத்தம்!

நம்ம ஊரு பொண்ணு... ஷ்ரேயா கல்ரா!

120 பகதூர்... ராஷி கன்னா!

காந்தா... மிக நீண்ட காத்திருப்பு... துல்கர் சல்மான்!

குருவாயூர் கோயிலில் ரீல்ஸ் விடியோ: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ஜஸ்னா சலீம்!

SCROLL FOR NEXT